Monday, April 8, 2013

நிஐம்

வேண்டாம் என நினைக்கிறேன்
உன் கண்கள் எனை கடக்கும்
  வரையில் அன்று.....
வெட்கம் இன்றி தொடர்கிறென்
மீண்டும் ஒருமுறையெனில் விழுந்திட வேண்டும்
   உன் விழியில் என்று.....

Thursday, January 24, 2013

நிலவும் நினைவும் ஒன்றடி...

இரவில் துரத்தும்
நிலவு  போல....
இமை மூடினும்
உன் நினைவுகள் நித்தம் தொடருதடி....
அந்த கதிர் தோன்றாமல்
நிலவும் மறைந்ததில்லை..
நீ என் எதிர் தோன்றாது
உன் நினைவுகளும்
எனை நீங்குவதில்லை....

Tuesday, June 5, 2012

இது ஒரு கனவா....

பொன் பந்தை
 பறித்து வர வா...
புது தென்றலால்
  வருடி விட வா...
மிதக்கும் கட்டில்
  விண்ணில் இட வா...
பட்டு துணியில்
  மெத்தை அமைக்க வா...
இரவில் குயிலை
   பாட சொல்ல வா...
அவ்விசைக்கு அலைகளை
  ஆட சொல்ல வா...
மேகம் கொண்டு
  போர்த்தி விட வா...
மெதுவாய் உன்னை
  நெருங்கி விட வா...
கழுத்தில் விண்மீன் மாலையிடவா...
 மஞ்சத்தில் சாய்கையில்
 மார்போடு அணைக்கவா...

Sunday, April 10, 2011

பிரிவு...

வழியோடு விழியாடும்...
நீயின்றி துயர் பாடும்....
முகிலும் முகம் சுளிக்கும்...
முழுமதியையும் அது மறைக்கும்....
விண்மீனும் இமை திறக்காது...
நீயின்றி அது சிரிக்காது....
கருவானில் காற்றிருக்காது
கன்னியவள்
என் காட்சியில் இல்லாவிடின்..........

இது போல் இரவு பயணம் இன்றியமயாதது.............. :) :)

என் கற்பனைக்கு எட்டிய
பெண்
என் முன் இருக்கையில்
அமர்ந்திருக்கிறாள்
இருள் சூழ்ந்த பேருந்திலும்
அவள் தூங்கும் அழகினை
ஜன்னலோர கண்ணாடியின்
வழியில் ரசித்து கொண்டிருக்கிறேன்
என் கைபேசி நண்பனின்
வெளிச்சத்தைக்கொண்டு.......!!!
அவளிடம் சொல்லிவிடதிர்கள்..... ;)

பிறை நிலவு
சட்டென்று அதிகமாய்
வெளிச்சத்தை பிரதிபலிக்கிறது.....
என்னவள் முன்னிருக்கையில்
கண் மலர்ந்துவிட்டாலோ.........
?????????????




என் அருகின்
முன் இருக்கையில்
அவள் இருக்கையில்
என் உறக்கம்
கண் பிரிந்து
களவு போனது.......

காதலும் இல்லை
காமமும் இல்லை
நட்பும் இல்லை
நாட்டமும் இல்லை
என் கற்பனை ஓவியம்
கண் முன் உயிர்பெற்றிருக்கையில்
கண்டு களிப்பது தவறில்லையேல்........


இந்த பேருந்தின்
இரவு பயணத்தில்
இரு பிறை நிலவுகள்.....
என்னுடன் பயணிக்கிறது
ஒன்று என்னை
தொடர்கிறது தூங்காமல்
என்னுடன்........
மற்றொன்றும் தொடர்கிறது
முன்னங்கையில் முகம் வைத்துக்கொண்டு
மெல்லிசையில் மிதந்துகொண்டு
தென்றலை அணைத்துக்கொண்டு
இதமாய் இவ்விரவில் துயில் தழுவிக்கொண்டு.........
ஜன்னலோர முதலொன்று
அதன் அழகில்
என்னை
உருகச் செய்கிறது.......
என் முன்னிருக்கையில்
இருக்கும் மற்றொன்று
அந்தச் சிறு இடைவெளியில்
என்னை
மறுகச் செய்கிறது........



பயணம் முடிகையில்
இருள்வரா விடியல்
வந்துவிட்டது................... :) :) :)

Sunday, February 27, 2011

போதும்.....

என் பாடல்களுக்கு
வரிகள் தேவையில்லை
ஓசையே போதுமானது....
என் கவிதைகளுக்கு
சொற்றிடை தேவையில்லை
நடையே போதுமானது....
என் கனவுகளுக்கு
உறக்கம் தேவையில்லை
உன் முகம் போதுமானது....
என் காயங்களுக்கு
மருந்து தேவையில்லை
காலமே போதுமானது....
என் வாழ்கைக்கு
நீ தேவையில்லை
நினைவுகளே போதுமானது....
என் முடிவுக்கு
விடிவு தேவையில்லை
மடிவதே போதுமானது....
சொல்லாத வார்த்தைகள்
மட்டுமே....
என் எண்ணங்களை
சரிவர பிரதிபலித்தவை....
உன்னிடம் மட்டும்....

About Me

My photo
கவி எழுதும் சிறு கலைஞன்.......