உன்னிடம் பேசிய வார்த்தைகளை
பல முறை அசை போட்டு பார்கிறேன்
பெரிதாய் ஒன்றும் பேசவில்லை
எனினும் சுவைக்கிறது ஒவ்வொருமுறையும்...
என் கற்பனைகள் கவியாய் பூத்திருக்கும் சிறு கவி தோட்டம்.......... It contains small Tamil poems in many topics.... even u can suggest some topics to write poem.....
Thursday, December 23, 2010
Tuesday, December 21, 2010
ஒரு பெண் சொல்லிவிட்ட காதலை எண்ணி
கயலின் காதல் கடலோடுதான்
என் வாழ்கை என்றும் உன்னோடுதான்
எண்ணியதை சொல்லிவிட்டேன் விழியோடு
நம் பயணம் தொடங்குவது உன் முடிவோடு...
உன் எண்ணம் என்னவென்று நான் அறிவேன்
அதை சொல்லாத நொடிகளின் பொருளறியேன்
என் மனம் கிடந்து தவிப்பதை நீ அறிவாயா
தாமதிக்காது உன் சம்மதத்தை சொல்வாயா
நொடி பொழுதும் உன் நினைவு
எனை பிரிவதில்லை
இருந்தாலும் நம் கரங்கள்
ஒரு சேரவில்லை
சூரியனை காணாத நிலவு
அழகாய் என்றும் தெரியாது
நீ இல்லாது நான் கடத்தும் நாட்கள்
என் வாழ்கை கணக்கில் சேராது
இரவோடும் பகலோடும்
காலம் செல்லும்
கேட்டுபார் என் நிலையை
கண்ணீர்விட்டு சொல்லும்
கடல் வானம் விண்மீன்
வெகுதூரம் இருக்கும்
என் வருத்தம் என்னவென்று
அது கூட உரைக்கும்
நீர் உணவு துயில் என்று
எதுவும் நினவு இல்லை
நீ தள்ளி இருப்பதே
என் துயரின் எல்லை
என் மைவிழி கசிவதும்
மனதுக்குள் மடிந்தேழுவதும்
கடவுளை நம்புவதும்
கனபொழுதும் தவமிருப்பதும்
உன் முடிவுக்காகத்தான்...
விரைந்து முடிவை சொல்லிவிடு
விரைவில் என்னை மாலையிடு
விரக தாபம் தீர்த்துவிடு
என் விழியில் நீரை வார்த்துவிடு...
என் வாழ்கை என்றும் உன்னோடுதான்
எண்ணியதை சொல்லிவிட்டேன் விழியோடு
நம் பயணம் தொடங்குவது உன் முடிவோடு...
உன் எண்ணம் என்னவென்று நான் அறிவேன்
அதை சொல்லாத நொடிகளின் பொருளறியேன்
என் மனம் கிடந்து தவிப்பதை நீ அறிவாயா
தாமதிக்காது உன் சம்மதத்தை சொல்வாயா
நொடி பொழுதும் உன் நினைவு
எனை பிரிவதில்லை
இருந்தாலும் நம் கரங்கள்
ஒரு சேரவில்லை
சூரியனை காணாத நிலவு
அழகாய் என்றும் தெரியாது
நீ இல்லாது நான் கடத்தும் நாட்கள்
என் வாழ்கை கணக்கில் சேராது
இரவோடும் பகலோடும்
காலம் செல்லும்
கேட்டுபார் என் நிலையை
கண்ணீர்விட்டு சொல்லும்
கடல் வானம் விண்மீன்
வெகுதூரம் இருக்கும்
என் வருத்தம் என்னவென்று
அது கூட உரைக்கும்
நீர் உணவு துயில் என்று
எதுவும் நினவு இல்லை
நீ தள்ளி இருப்பதே
என் துயரின் எல்லை
என் மைவிழி கசிவதும்
மனதுக்குள் மடிந்தேழுவதும்
கடவுளை நம்புவதும்
கனபொழுதும் தவமிருப்பதும்
உன் முடிவுக்காகத்தான்...
விரைந்து முடிவை சொல்லிவிடு
விரைவில் என்னை மாலையிடு
விரக தாபம் தீர்த்துவிடு
என் விழியில் நீரை வார்த்துவிடு...
Sunday, December 19, 2010
எட்டும் நிலா....
நிலத்தில் இருந்து
பார்க்கும் பொது
நிலவு சற்று பக்கம் தான்...
அதை தொட்டுவிட
நினைத்து விட்டால்
தெரியும் அதன் தூரம் தான்...
நித்தம் நோக்கி
பயணித்தால் அந்த
நிலவு உந்தன் காலடியில்...
சோர்வு சற்று
நினைவில் வந்தால்
அது மறைந்துவிடும் விண்வெளியில்....
பார்க்கும் பொது
நிலவு சற்று பக்கம் தான்...
அதை தொட்டுவிட
நினைத்து விட்டால்
தெரியும் அதன் தூரம் தான்...
நித்தம் நோக்கி
பயணித்தால் அந்த
நிலவு உந்தன் காலடியில்...
சோர்வு சற்று
நினைவில் வந்தால்
அது மறைந்துவிடும் விண்வெளியில்....
Friday, December 3, 2010
என்னை பற்றி.. (மன்னிச்சிடுங்க)
திறந்த புத்தகமும் அல்ல
என்னில் பக்கங்களை
திருப்பியவர்கள் மிக சில...
திறமைகள் நிறைந்தவனும் அல்ல
அவைஎதும் இல்லாத
ஏழை இவனில்ல...
திமிறேடுத்தவனும் அல்ல
என்தோற்றம் அப்படி
இருக்க நான் காரணமல்ல..
எளிதில் கோபம் கொள்பவன் அல்ல
நண்பர்களிடம் மட்டும் என்னால்
அதை தொடர முடியவில்ல....
கடமையை கண்டு சோர்பவன் அல்ல
சரிவர முடிக்க தெரியாத
முட்டாளும் நானில்ல...
வேகத்தில் நான் வேங்கை அல்ல
சோம்பேறி என்ற வார்த்தைக்கு
சொந்தகாரனாக விருப்பமில்ல...
காதல் அனுபவம் இல்லாதவன் அல்ல
கண்டதும் அது மலரும்
என்று நம்புபவனுமல்ல...
சரித்திரம் பேசும் சாதனையாளன் அல்ல
வாழ்கையை புரிந்துகொள்ள முனையும்
சாதாரண மனிதன் தான்...
:):):)
என்னில் பக்கங்களை
திருப்பியவர்கள் மிக சில...
திறமைகள் நிறைந்தவனும் அல்ல
அவைஎதும் இல்லாத
ஏழை இவனில்ல...
திமிறேடுத்தவனும் அல்ல
என்தோற்றம் அப்படி
இருக்க நான் காரணமல்ல..
எளிதில் கோபம் கொள்பவன் அல்ல
நண்பர்களிடம் மட்டும் என்னால்
அதை தொடர முடியவில்ல....
கடமையை கண்டு சோர்பவன் அல்ல
சரிவர முடிக்க தெரியாத
முட்டாளும் நானில்ல...
வேகத்தில் நான் வேங்கை அல்ல
சோம்பேறி என்ற வார்த்தைக்கு
சொந்தகாரனாக விருப்பமில்ல...
காதல் அனுபவம் இல்லாதவன் அல்ல
கண்டதும் அது மலரும்
என்று நம்புபவனுமல்ல...
சரித்திரம் பேசும் சாதனையாளன் அல்ல
வாழ்கையை புரிந்துகொள்ள முனையும்
சாதாரண மனிதன் தான்...
:):):)
Thursday, December 2, 2010
Monday, November 8, 2010
அடி தோழி...
பிரதிபலிக்கும் கண்ணாடியாய்
உன்னை நினத்திருந்தேன்..
இருவரையும் ஒரு பார்வையில்
பார்க்க முடிந்தது...
இப்போது உன் முகம் திருப்பிகொண்டாய்
நான் என் செய்வது.....!
உன்னை நினத்திருந்தேன்..
இருவரையும் ஒரு பார்வையில்
பார்க்க முடிந்தது...
இப்போது உன் முகம் திருப்பிகொண்டாய்
நான் என் செய்வது.....!
Thursday, October 21, 2010
முடிவுகள்....
சில நேரம் முடிவுகள் சிந்திக்க வைக்கிறது
சில நேரங்களில் சிதைத்துவிடுகிறது
சிதைந்த பிறகே சிந்திக்கிறேன்
முடிவுகள் எவ்வளவு முக்கியமானவை என்று..........
சில நேரங்களில் சிதைத்துவிடுகிறது
சிதைந்த பிறகே சிந்திக்கிறேன்
முடிவுகள் எவ்வளவு முக்கியமானவை என்று..........
உன்னை நினைக்கையில்....
கிறுக்கல்கள் அழகாகும்
சிந்தனைகள் சிற்பமாகும்
கற்பனைகள் கடலாகும்
முடிவில் முழுமையான கவிதையாகும்
உன்னை நினைத்தால் மட்டும்............
சிந்தனைகள் சிற்பமாகும்
கற்பனைகள் கடலாகும்
முடிவில் முழுமையான கவிதையாகும்
உன்னை நினைத்தால் மட்டும்............
Tuesday, October 12, 2010
எப்படி இருக்கு.... :)
நினைக்காத நாட்கள் இல்லை
என் கண்ணிற் என் கண்களை......
நிறமாறும் பூக்கள் இல்லை
இம்மனில் உன்போல் சிலரும்....
என் கண்ணிற் என் கண்களை......
நிறமாறும் பூக்கள் இல்லை
இம்மனில் உன்போல் சிலரும்....
Monday, September 27, 2010
கவிதையின் தேடல்
எழுதாத கவிதையை
தேடும் பயணத்தில்
வந்தடைந்தது உன்னைத்தான்...
கவிதை உன்னிடம் உள்ளதா....
அல்லது.... நீ தான் கவிதையா.....
:)
நினைவை தொட்டுபோகும்
நிழல்கள் நித்திரையில் நீள்கிறது இப்பொழுது.....
மனதை தொடபோகும்
மயிலுடன் மையல் கொள்வது எப்பொழுது......
Monday, May 24, 2010
Subscribe to:
Posts (Atom)