Tuesday, December 21, 2010

ஒரு பெண் சொல்லிவிட்ட காதலை எண்ணி

கயலின் காதல் கடலோடுதான்
என் வாழ்கை என்றும் உன்னோடுதான்
எண்ணியதை சொல்லிவிட்டேன் விழியோடு
நம் பயணம் தொடங்குவது உன் முடிவோடு...
உன் எண்ணம் என்னவென்று நான் அறிவேன்
அதை சொல்லாத நொடிகளின் பொருளறியேன்
என் மனம் கிடந்து தவிப்பதை நீ அறிவாயா
தாமதிக்காது உன் சம்மதத்தை சொல்வாயா
நொடி பொழுதும் உன் நினைவு
எனை பிரிவதில்லை
இருந்தாலும் நம் கரங்கள்
ஒரு சேரவில்லை
சூரியனை காணாத நிலவு
அழகாய் என்றும் தெரியாது
நீ இல்லாது நான் கடத்தும் நாட்கள்
என் வாழ்கை கணக்கில் சேராது
இரவோடும் பகலோடும்
காலம் செல்லும்
கேட்டுபார் என் நிலையை
கண்ணீர்விட்டு சொல்லும்
கடல் வானம் விண்மீன்
வெகுதூரம் இருக்கும்
என் வருத்தம் என்னவென்று
அது கூட உரைக்கும்
நீர் உணவு துயில் என்று
எதுவும் நினவு இல்லை
நீ தள்ளி இருப்பதே
என் துயரின் எல்லை
என் மைவிழி கசிவதும்
மனதுக்குள் மடிந்தேழுவதும்
கடவுளை நம்புவதும்
கனபொழுதும் தவமிருப்பதும்
உன் முடிவுக்காகத்தான்...
விரைந்து முடிவை சொல்லிவிடு
விரைவில் என்னை மாலையிடு
விரக தாபம் தீர்த்துவிடு
என் விழியில் நீரை வார்த்துவிடு...

No comments:

About Me

My photo
கவி எழுதும் சிறு கலைஞன்.......