Friday, December 3, 2010

என்னை பற்றி.. (மன்னிச்சிடுங்க)

திறந்த புத்தகமும் அல்ல
என்னில் பக்கங்களை
திருப்பியவர்கள் மிக சில...
திறமைகள் நிறைந்தவனும் அல்ல
அவைஎதும் இல்லாத
ஏழை இவனில்ல...
திமிறேடுத்தவனும் அல்ல
என்தோற்றம் அப்படி
இருக்க நான் காரணமல்ல..
எளிதில் கோபம் கொள்பவன் அல்ல
நண்பர்களிடம் மட்டும் என்னால்
அதை தொடர முடியவில்ல....
கடமையை கண்டு சோர்பவன் அல்ல
சரிவர முடிக்க தெரியாத
முட்டாளும் நானில்ல...
வேகத்தில் நான் வேங்கை அல்ல
சோம்பேறி என்ற வார்த்தைக்கு
சொந்தகாரனாக விருப்பமில்ல...
காதல் அனுபவம் இல்லாதவன் அல்ல
கண்டதும் அது மலரும்
என்று நம்புபவனுமல்ல...
சரித்திரம் பேசும் சாதனையாளன் அல்ல
வாழ்கையை புரிந்துகொள்ள முனையும்
சாதாரண மனிதன் தான்...
:):):)

No comments:

About Me

My photo
கவி எழுதும் சிறு கலைஞன்.......