
தொப்புள் கொடி அறுக்கும் முன்பு என் மூச்சை
உள்ளே வைத்திருந்தாய்
நான் புவி கண்ட அந்நேரம்
என்னுயிர் எனதல்ல உனதென்று உணரவைத்தாய்
நீ
எந்த
குணமாயினும்
நிறமாயினும்
விலங்காயினும்
மொழியாயினும்
வழியாயினும்
உயிராயினும்
அனுவாயினும்
இயற்கயாயினும்
இறைவனாயினும்
இங்கு இந்த தாய்மைக்கு நன்றி கூறி ஓய்ந்தவர் எவறுமில்லை
இந்த சேய்க்கும் உள்ளிருக்கும் உணர்வுமிக்க பாசம்
அது ஒருநாளும் உலரந்துபோவதுமில்லை......
இது வார்த்தைகளை கோர்த்தெடுத்த வாக்கியமல்ல
எனக்கு எழுத கிடைக்கப்பெற்ற வரம்.....