Tuesday, January 11, 2011

எனக்கு தெரிந்தவரை......

பூவை கேட்டால்
பரித்துகொடுப்பது
நட்பு...
பூந்தோட்டம்
அமைத்துகொடுப்பது
காதல்...

என்ன சொல்வது....

வலியை மொழிபெயர்க்க
வார்த்தை இல்லை....
ஆனால்
என் வார்த்தைகள் கூட
சிலருக்கு புரிவதில்லை.....

:)

நீண்டநாள் குழப்பம்
இன்று தீர்ந்தது...
நீ சொல்லிய
சில வார்த்தைகளில்
நான் ஏமார்ந்தது
புரிந்தது...
என்றாலும் சிரித்தேன்
இன்றாவது எனக்கு
தெரிந்தது....

Monday, January 10, 2011

எந்தன் உணர்வு.....

ஒரு அழகான உறவை
உடைத்துவிட்டேன்
என் வானில் நிலவை
இழந்துவிட்டேன்
இமையோரம் என் சோகம்
மறைத்துவிட்டேன்
என் வாழ்வில் இருள்கொஞ்சம்
சேர்த்துவிட்டேன்
சுமை தாங்க முடியாமல்
சொல்லிவிட்டேன்
சொன்னாலும் புரியாது என்று
தெரிஞ்சிகிட்டேன்
வலியோடு அவள் கையை
விட்டுவிட்டேன்....

About Me

My photo
கவி எழுதும் சிறு கலைஞன்.......