என் பாடல்களுக்கு
வரிகள் தேவையில்லை
ஓசையே போதுமானது....
என் கவிதைகளுக்கு
சொற்றிடை தேவையில்லை
நடையே போதுமானது....
என் கனவுகளுக்கு
உறக்கம் தேவையில்லை
உன் முகம் போதுமானது....
என் காயங்களுக்கு
மருந்து தேவையில்லை
காலமே போதுமானது....
என் வாழ்கைக்கு
நீ தேவையில்லை
நினைவுகளே போதுமானது....
என் முடிவுக்கு
விடிவு தேவையில்லை
மடிவதே போதுமானது....
என் கற்பனைகள் கவியாய் பூத்திருக்கும் சிறு கவி தோட்டம்.......... It contains small Tamil poems in many topics.... even u can suggest some topics to write poem.....
Sunday, February 27, 2011
Sunday, February 13, 2011
ஒரு பாடல்... முதற் பாடல் :) (just a try.......)
கனவிலே
என் கண்களின் கண்மணியாக
அவளும் இருக்கிறாள்......
நேரிலே
என் கண்முன் ஒருகணம்
நிற்ககூட மறுக்கிறாள்......
இது எந்த ஜென்ம பாவம்
தாங்கவில்லை சோகம்
தடங்கள் தடுமாறி
தரையில் இருந்தும்
நான் விழுகிறேன்.......
அடி உனக்கேன் உனக்கேன் என் மனம் புரியவில்லை.....
ஆனால் உன்னை மறக்க என்னால் முடியவில்லை....
பெண்ணே உன்னை தேடி
பூக்கள் கொண்டு வந்தேன்
அதில் உனக்கு பிடித்தது
எதுவும் இல்லை என்றாய்....
காதல் சொல்ல நானும்
கவிதைகள் கொண்டு வந்தேன்
அதை கையில் வாங்கி
கிழித்து எரிந்து விட்டாய்....
கடைசியில் ஒருநாள் நானே
நேரில் வாய் திறந்தேனே
என்னை எப்படி உனக்கு
பிடிக்கும் என்றாய்......
இளமனம் அழுதது.....
இதயமே வெடித்தது.....
இன்னும் என்ன வாழ்கைதான்
இறந்திட துடித்தது....
அடி உனக்கேன் உனக்கேன் என் மனம் புரியவில்லை.....
ஆனால் உன்னை மறக்க என்னால் முடியவில்லை....
ஒரு மரத்தின் அடியில் தனியே நின்றிருந்தேன்....
என் தனிமை சுமையை அதன்மேல் சாய்த்திருந்தேன்.....
சிறுவிரல்கள் என் தொலை தட்டியது...
நான் மெதுவாய் திரும்ப மின்னல் வெட்டியது...
அவள் I LOVE YOU
என்னிடம் சொன்னாலே.....
இதுதான்... என் காதல்.......................
இவள்தான்.... என் தேடல்............................
கைசேர்ந்தது...........
வானம் ரெக்ககட்டி பறக்குது......
எதனாலே....
இந்தபூமி என்ன சுத்தி வருகுது......
அதனாலே....
நிலவும் இங்க பகலுல ஜொலிக்குது......
எதனாலே....
நீலவானம் இப்போ செவக்குது......
அதனாலே....
அடி உனக்கேன் உனக்கேன் என்னை பிடித்தது.....
உன்னால் எந்தன் உலகம் தலைகிழாகுது....
இந்த காதல் மயக்கம்
தீண்டும் எந்த உயரம் தான்........

Subscribe to:
Posts (Atom)