Tuesday, May 20, 2008

வாழ்த்துக்கள்

எண்ணங்கள் தெளிவை தேடட்டும்..
முயற்சிகள் முடிவை நோக்கட்டும்..
கனவுகள் கண்முன் 
உயிர்பிக்கட்டும்..
உறவுகள் உறுதியாகட்டும்..
புதிய உறவுகள் உருவாகட்டும்..
நட்புக்குள் நட்பு பெருகட்டும்..
நாட்டில் நல்லவை ஓங்கட்டும்..
இயற்கை எழில் 
கெடாதிருக்கட்டும்..
இன்னல் தரும் சீற்றங்கள்
இனியாவது குறையட்டும்..
இன்பங்கள் நிறையட்டும்..
துன்பங்கள் தூங்கட்டும்.......
எதிர்காலம் நம்மை எதிர்நோக்குகின்றது
இறந்தகாலம் இன்புற வழி அனுப்புகிறது
புத்தாண்டில் புதிய தடம் பதிப்போம்
யுகம் ஜெயிப்போம்.........!

About Me

My photo
கவி எழுதும் சிறு கலைஞன்.......