Sunday, April 20, 2008

தேவதை

உன் இமைகள் திறந்த நேரத்தில்
என் விழிகள் மூட மறந்துவிட்டேன்
இன்றென்னை இழந்துவிட்டேன் .....
இவள் எனக்கென பிறந்தவளோ
எழில் கொஞ்சும் புது மலரோ
நிலவின் பிம்பமோ
நீள்விழி நீந்துமோ
உயிர்கொண்ட சிலையோ
உலராத பூவிதழோ
அழகின் சிரிப்போ
அபூர்வ படைப்போ
தென்றலின் உருவமோ
தெவிட்டாத அமுதமோ
தீண்டாத தழலோ
தித்திக்கும் தேனோ
கண்களில் காதலோ
இதென்னுடைய கானலோ
கார்குழல் இரவோ
கதிரவனங்கு உதிக்குமோ
செதுக்கிய சிற்றிடையோ
சிறுபார்வை ஒருமுறையோ
செழித்த தென்னையோ
தேர்ந்தெடுத்து வதைப்பது என்னையோ
நீ (இவள்) தான் தேவதையோ..............!

About Me

My photo
கவி எழுதும் சிறு கலைஞன்.......